திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தினாலான சங்கு, சக்கரம் – தேனி பக்தர் காணிக்கை

Scroll Down To Discover
Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து, தங்கள் காணிக்கைகளை குவித்து வருகின்றனர். மனதில் நினைத்தது அல்லது தொழிலில் லாபம் ஏற்பட்டு வேண்டியது நிறைவேறினால், கோடிக்கணக்கான ரூபாயை அந்த பக்தர் காணிக்கையாக அளிப்பர்.
https://twitter.com/Ashi_IndiaToday/status/1364502023673012225?s=20
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தினாலான சங்கு மற்றும் சக்கரத்தை கொடுத்துள்ளார்.