எல்லையில் அமைதி: இந்தியா-பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டறிக்கை

Scroll Down To Discover
Spread the love

இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இன்று முதல் அமைதியை நிலை நாட்ட, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்திய-பாகிஸ்தான் ராணுவ செல்பாடுகளின் தலைமை இயக்குநர்கள், ஹாட்லைன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எல்லை கட்டுப்பாட்டு நிலவரம் குறித்து, சமூகமான முறையில் ஆய்வு செய்யப்பட்டது.


இருதரப்பும் பயனடையும் வகையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நிலையான அமைதியை ஏற்படுத்தவும், வன்முறையை தூண்டி அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்னைகளை தீர்க்கவும், இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். 2021 பிப்ரவரி 25ம் தேதி முதல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சண்டை நிறுத்தம், மற்றும் அனைத்து ஒப்பந்தங்கள், புரிந்துணர்வுகளை கடுமையாக பின்பற்றவும் இரு தரப்பு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். எதிர்பாராத நிலவரம் அல்லது தவறான புரிதல்கள் ஏற்பட்டால், தற்போதுள்ள நடைமுறையான ஹாட்லைன் பேச்சுவார்த்தை, எல்லையில் ராணுவ உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.