குடியரசு தின விழா அணிவகுப்பு: கலை நிகழ்ச்சிகளில் 321 பள்ளி குழந்தைகள், 80 நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்பு.!

Scroll Down To Discover
Spread the love

டெல்லியில் உள்ள 4 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் கொல்கத்தா கிழக்கு மண்டல கலாச்சார மையத்தின் நாட்டுப்புற கலைஞர்கள் ஆகியோர் 2021 ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணி வகுப்பு கலாச்சார நிகழ்ச்சகளில் பங்கேற்கின்றனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சகம், கல்வி இயக்குனரகம், தில்லி அரசு ஆகியவை 401 மாணவர்களையும், கலைஞர்களையும் – 271 மாணவிகள் மற்றும் 131 மாணவர்களை – தேர்வு செய்துள்ளது.

தற்சார்பு இந்தியா: டெல்லியில் உள்ள மவுன்ட் அபு பள்ளி மற்றும் வித்ய பாரதி பள்ளி ஆகியவற்றின் கருப் பொருள் தற்சார்பு இந்தியாவுக்கான தொலை நோக்கு. இந்த பள்ளிகளில் இருந்து 38 மாணவர்கள், 54 மாணவிகள் பங்கேற்கின்றனர்.

டெல்லி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 102 மாணவிகள், பிரதமர் தொடங்கிய உடல் தகுதி இந்தியா திட்டத்தின் அடிப்படையில் உடல் தகுதி கருப்பொருளில் நிகழ்ச்சியை அளிக்கின்றனர்.டெல்லி டிடிஇஏ மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 127 பேர், தமிழக கலாச்சார நடன நிகழ்ச்சிகளில், பாரம்பரிய உடையுடன் பங்கேற்கின்றனர்.