ஆங்கில புத்தாண்டு : நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து.!

Scroll Down To Discover
Spread the love

ஆங்கில புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில், “ அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பையும் தனிப்பட்ட மற்றும் கூட்டு வளர்ச்சிக்கான தீர்வையும் புத்தாண்டு வழங்குகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சவால்கள், ஒற்றுமையாக முன்னேறிச்செல்ல வேண்டியதன் உறுதியை வலுப்படுத்தியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!, 2021 ஆம் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரட்டும். இந்த ஆண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.