பாகிஸ்தானில் இந்து கோயில் இடித்து தீயிட்டுக் கொளுத்திய “ஜேமியாத் உலெமா இ-இஸ்லாம்” அமைப்பு – அச்சத்தில் இந்துக்கள்..?

Scroll Down To Discover
Spread the love

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கரக் மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயிலை நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி சூறையாடியுள்ளனர். இந்த கோயில் 1920ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கோயிலை சூறையாடியது மட்டுமல்லாமல் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது சிறுபான்மை சமூக மக்களான இந்துக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில் சூறையாடப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


இச்சம்பவத்துக்கு உலகம் முழுவதும் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் 26 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஜேமியாத் உலெமா இ-இஸ்லாம் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. கட்சியின் தலைவர் ரெஹ்மத் சலாம் கத்தக்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்துக் கோயிலை அகற்ற வலியுறுத்தி ஜேமியாத் உலெமா இ-இஸ்லாம் தலைமையில் ஆயிரத்துக்கும் ஏற்பட்டோர் கோயிலை இடிக்க முயற்சித்துள்ளனர்.

கோயில் விரிவாக்க பணிகள் நடைபெறும் இடத்தில் ஏராளமானோர் கூடி கடுமையாக தாக்கியுள்ளனர்.முதலில் கோயிலுக்கு வெளியே அனைவரும் கூடியுள்ளனர். பின்னர் சில தலைவர்கள் உரையாற்றி இருக்கின்றனர். பின்னர் கோயிலை நோக்கி நகர்ந்து சூறையாடியுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யும்படி கைபர் பக்துன்க்வா முதலமைச்சர் மஹ்மூத் கான் உத்தரவிட்டுள்ளார்.