சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 50.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் ; ஒருவர் கைது

Scroll Down To Discover
Spread the love

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலை தொடர்ந்து, இண்டிகோ விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த கடலூரைச் சேர்ந்த சையது இம்ரன் அகமது, 28, என்பவர் வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.


அவரை சோதனை செய்து பார்த்த போது, தங்கப்பசை கொண்ட பொட்டலங்களை அவரது உடலில் மறைத்து வைத்துக் கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. ரூபாய் 50.54 லட்சம் மதிப்புள்ள 980 கிராம் 24 கேரட் தங்கம் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.