மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்.!

Scroll Down To Discover
Spread the love

மேற்கு வங்காள மாநிலம் கூச்பேகர் தாக்‌ஷின் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மிஹிர் கோஸ்வாமி. இவர் நேற்று திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகினார்.

டெல்லியில், பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- நான் கட்சியில் நீண்ட காலமாக அவமதிக்கப்பட்டு வந்தேன். அதை கட்சி தலைமையிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விலகியுள்ளேன். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப மாநிலத்தில் புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்க பா.ஜனதாவில் சேர்ந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.