மின்சார லைன்களுக்கான அவசரகால மீட்பு முறையை உள்நாட்டிலேயே சென்னை சிஎஸ்ஐஆர்- எஸ்இஆர்சி உருவாக்கியுள்ளது.!

Scroll Down To Discover
Spread the love

சென்னையைச் சேர்ந்த அமைப்பு பொறியில் ஆராய்ச்சி மையம் (எஸ்இஆர்சி)-யின் அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சில் ( சிஎஸ்ஐஆர்) பரிசோதனைக்கூடம், உள்நாட்டு தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

மின்சார விநியோக கோபுரங்களில் திடீரென ஏற்படும் மின்தடையை, உடனடியாக சரி செய்யும் அவசர மீட்பு முறையே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. சிஎஸ்ஐஆர்- எஸ்இஆர்சி, அகமதாபாத்தைச் சேர்ந்த அத்வைத் இன்பராடெக் நிறுவனத்துடன் உரிமத்துக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது.


தற்போது இந்த தொழில்நுட்பம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை தயாரிக்கும் நிறுவனங்கள் மிகச்ச்சிலவே உள்ளதால், இதற்கான செலவு அதிகமாக உள்ளது. இந்த தொழில்நுட்ப மேம்பாடு முதன்முதலாக இந்தியாவில் இதனை உற்பத்தி செய்ய ஏதுவாகி உள்ளது. இந்தியா, சார்க் நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இதற்கு தேவை அதிகமாக உள்ளது. எனவே, இந்த தொழில்நுட்ப உருவாக்கம், தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு பெரிதும் உதவும்.

எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வகையில், குறைந்த எடையைக் கொண்ட இந்த தொழில்நுட்பம், புயல், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள், மனிதத் தவறுகளால் ஏற்படும் மின்தடையை சீராக்க பெரிதும் உதவக்கூடியது. இந்த தொழில்நுட்பத்தை வைத்து, குறைந்த நேரத்தில் மின்சாரம் திரும்பக் கிடைக்க செய்ய முடியும். இயற்கைச் சீற்றங்களின் போது, மின் விநியோகத்தை சீரமைக்க பல நாட்கள் ஆகும் என்பதால், ஏற்படும் இழப்பை இது குறைக்க உதவும்.

இதற்கான ஒப்பந்தம், சென்னை சிஎஸ்ஐஆர்- எஸ்இஆர்சி இயக்குநர் பேராசிரியர் சந்தோஷ் கபூரியா, புதுதில்லி மத்திய மின் ஆணையத்தின் தலைமை பொறியாளர் தஎஸ்.கே.ராய் மகோபத்ரா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை சிஎஸ்ஐஆர்- எஸ்இஆர்சி உருவாக்கிய இஆர்எஸ் தொழில்நுட்பத்திற்கான உரிம ஒப்பந்தம், அகமதாபாத் அத்வைத் இன்பராடெக் நிறுவனத்துடன், சென்னை சிஎஸ்ஐஆர்- எஸ்இஆர்சி இயக்குநர் பேராசிரியர் சந்தோஷ் கபூரியா, புதுதில்லி மத்திய மின் ஆணையத்தின் தலைமை பொறியாளர் திரு. எஸ்.கே.ராய் மகோபத்ரா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.