மாங்காடு பேரூராட்சியில் இலவச மருத்துவ முகாம்.!

Scroll Down To Discover
Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் மாங்காடு பேரூராட்சி இலவச மருத்துவ முகாமை செயல் அலுவலர் ரவி சந்திரபாபு தொடங்கி வைத்தார்.

இலவச மருத்துவ முகாம் ஆனது பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மக்கள் பயன்படும் வகையில் இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சளி இருமல் காய்ச்சல் அறிகுறி இருந்த மக்களுக்கு இலவசமாக கோரோனோ பரிசோதனை செய்து கொடுக்கப்படுகிறது கொரோனா வைரஸ் வராமல் இருக்க மக்களுக்கு தடுப்பு நடவடிக்கையாக மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

மேலும் செயல் அலுவலர் கூறுகையில் மாங்காடு பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து மக்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் பரவாமல் இருக்க கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என மக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இவ்வாறு அவர் கூறினார் சிறப்பான முறையில் செயல்பட்ட செயல் அலுவலர் ரவி சந்திரபாபுவை உதவி இயக்குனர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.

செய்தி : வாசு