பீஹார் சட்டசபை தேர்தல் : நிதிஷ் குமார் கட்சியில் போலீஸ் அதிகாரி

Scroll Down To Discover
Spread the love

பீஹார் சட்டசபை தேர்தல் தேதிகளை அறிவித்து விட்டது, தேர்தல் ஆணையம். கொரோனா சமயத்தில் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பீஹாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சியில் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உட்பட வேறு சில கட்சிகளும் கூட்டணி அமைத்து, நிதிஷ் குமாருக்கு எதிராக களம் இறங்கியுள்ளன.லாலு, ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார்; உடல்நிலையும் சரியில்லை. அவரது குடும்பத்திலும் அரசியல் சண்டை.காங்கிரசைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஒரு காலத்தில் பீஹாரில் கொடிக்கட்டி பறந்த காங்கிரஸ், இப்போது பரிதாப நிலையில் உள்ளது.

இந்நிலையில் மீண்டும் நிதிஷ் குமார் தான் ஆட்சி அமைப்பார் என்கின்றன, டில்லி அரசியல் வட்டாரங்கள். பீஹாரில் டி.ஜி.பி., யாக இருந்தவர் குப்தேஷ்வர் பாண்டே. ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன், விருப்ப ஓய்வு பெற்றார். நிதிஷுக்கு படு நெருக்கம். நேற்று நிதிஷ் கட்சியில் சேர்ந்த பாண்டே, சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். இவரை வெற்றி பெற வைக்க, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார் நிதிஷ் குமார் என்கின்றனர். நிதிஷ் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானால், இந்த பாண்டே, மாநில உள்துறை அமைச்சராவார் என்றும் கூறப்படுகிறது.