நடமாடும் நியாய விலைக்கடைகள் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் தொடங்கப்படும் – அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Scroll Down To Discover
Spread the love

தமிழகம் முழுவதும் நடமாடும் நியாய விலைக்கடைகள் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் தொடங்கப்படும், தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

தமிழழகத்தில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான வைகை அணையில் இருந்து பெரியார் பாசன பகுதியில் ஒரு போக பாசனத்திற்கு சுமார் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு 1130 கன அடி தண்ணீர் இன்று முதல் 120 நாட்கள் திறக்கப்படுகிறது,

இந்த நிலையில் இன்று மதுரை கள்ளந்திரி பகுதியில் உள்ள பிரதான வாய்க்கால் பகுதியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பொதுப்பணித்துறையினர் விவசாய பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்,

அதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்,ஒரு போக விவசாயிகள் சிறப்பான முறையில் விவசாயம் செய்ய பெரியாறு பாசன கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது,விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நியாவிலை கடை தொடங்கப்படும்,சிலைகளை பாதுகாப்பதில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது,அது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை இல்லை,அரசு நினைத்தால் எதையும் சாதித்து காட்ட முடியும் மக்களின் பிரச்சனைகளை நிறைவேற்ற முடியும், சசிகலா பற்றிய கேள்விக்கு,பதிலளிக்க மறுத்துவிட்டார்.