தையல் இயந்திரத்தில் இருந்து நல்ல பாம்பு மீட்ட தீயணைப்புத்துறையினர்..?

Scroll Down To Discover
Spread the love

மதுரை அனுப்பானடி நிலைய எல்லைக்குட்பட்ட மாருதி நகர் வ.உ.சி சாலை அருகில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 4 அடி உள்ள நல்ல பாம்பு தையல் இயந்திரத்தில் இருந்துள்ளது இதைப் பார்த்து இருந்த வீட்டின் உரிமையாளர் தையல் இயந்திரத்தில் உள்ள பாம்பு பிடிப்பதற்கு முயற்சி செய்தார்.

நல்ல பாம்பாக இருந்ததால் சீர தொடங்கியது சுதாரித்துக்கொண்ட . வீட்டின் உரிமையாளர் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அனுப்பானடி நிலைய அலுவலர் உதயகுமார். தலைமையிலான தீயணைப்புத்துறையினர், தையல் இயந்திரத்தில் சிக்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் பத்திரமாக மீட்டனர்.

உரிய நேரத்தில் வீட்டின் உரிமையாளர் பாம்பை பார்த்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.