பிரதமர் கவுசல் விகாஸ் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் திறன் மேம்பாட்டு மையங்கள்.!

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் கவுசல் விகாஸ் திட்டத்தின்( 2016-20) கீழ், தமிழகத்தில் 17.03.2020 வரை குறுகிய கால படிப்புகள் மற்றும் முந்தைய கற்றலுக்கு அங்கீகாரம் திட்டங்களில் முறையே, 2.25 லட்சம் மற்றும் 1.79 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.

பொதுமுடக்கம் காரணமாக, வெளிநாடுகளில் வேலை இழந்து, அண்மையில் இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு திரும்பி வந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் உத்தேசம் உள்ளதா என, மக்களவை உறுப்பினர் தஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டில் இதுவரையிலும், பயிற்சி பெற்றவர்களில், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வினவியுள்ளார்.

உறுப்பினரின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர், பொது முடக்க காலத்தின் போது, வெளிநாடுகளில் இருந்து அண்மையில் வேலை இல்லாமல், தாயகம் திரும்பிய இளைஞர்களுக்கு தனியாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கூறினார். இருப்பினும் அவர்கள், தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களில் பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறிய அமைச்சர், வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் வேலை வாய்ப்புகளை அணுகும் வகையில், இந்திய அரசின் சுவதேஸ் திட்டம், திறன் கண்டறிதல் வசதியை அளித்து வருகிறது என்றார்.திறன் இந்தியா இயக்கத்தின் கீழ், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் மேற்கூறிய இரண்டு திட்டங்களை அமல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். பயிற்சி பெற்றவர்களில், 1.15 லட்சம் பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 2.51 லட்சம் பேர் முந்தைய கற்றலுக்கு அங்கீகாரம் திட்டத்தின் கீழ், இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழகத்தில், தேசிய திறன் மேம்பாட்டு கழகம், மாநில திறன் மேம்பாட்டு இயக்கம் ஆகியவை இதற்காக நியமிக்கப்பட்ட பயிற்சி அளிப்பவர்கள் மூலம் , பிரதமர் கவுசல் விகாஸ் திட்டத்தை, அமல்படுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.