திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம் : அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கையில் அதிர்ச்சியில் திமுக..!

Scroll Down To Discover
Spread the love

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணம் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன், சிங்கப்பூர் சார்ந்த நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணத்தை அந்நிய செலவாணிக்கு மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ஜெகத்ரட்சகனின் சொத்துகளை முடக்கி, பெமா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் திமுகவினர் பலர் களக்கத்தில் உள்ளனர். மேலும் அவ்வப்போது அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.