மீன்பிடி படகில் வங்கதேசத்துக்கு கடத்த முயன்ற ரூ 3.3 கோடி மதிப்புள்ள ஜவுளிப் பொருட்கள் – பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள் ..!

Scroll Down To Discover
Spread the love

மீன்பிடி படகில் வங்கதேசத்துக்கு கடத்த முயன்ற ரூ 3.3 கோடி மதிப்புள்ள ஜவுளிப் பொருட்களை சுங்கத்துறை பறிமுதல் செய்து உள்ளனர்.

இது குறித்து கூறுகையில் : தங்களுக்குக் கிடைத்த நுண்ணறிவுத் தகவலின் அடிப்படையில், டயமண்ட் துறைமுகத்தில் இருந்து சாகர் தீவை நோக்கி வந்து கொண்டிருந்த மீன்பிடி படகு ஒன்றை, 2020 செப்டம்பர் 6 மற்றும் 7-க்கு இடைபட்ட இரவில் சுங்க ஆணையரகம் (தடுப்பு), மேற்கு வங்கத்தின் அதிகாரிகள் இடைமறித்தனர்.

அதிகாரிகளை பார்த்தவுடன், படகில் இருந்தவர்கள் தப்பி செல்ல முயன்றனர். ஆனால், ஜியோன்காளிக்கு அருகே அவர்களில் ஆறு பேர், இந்திய கடலோரக் காவல் படை மற்றும் உள்ளூர் காவல் துறையின் உதவியுடன் பிடிபட்டனர்.


சோதனையின் போது, மீன்பிடி படகில் வங்கதேசத்துக்கு கடத்த முயன்ற ரூ 3.3 கோடி மதிப்புள்ள ஜவுளிப் பொருட்களை சுங்கத் துறை பறிமுதல் செய்தது. கைபேசிகள் மற்றும் வங்கதேச சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சமீப காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பறிமுதல்களில் இதுவும் ஒன்று. அனைத்து சட்டவிரோத வழிகளும் அரசு முகமைகளால் கண்காணிக்கப்படுகிறது என்றும், தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.