எஸ். பி. பாலசுப்ரமணியம் சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – நடிகர் ரஜினிகாந்த்

Scroll Down To Discover
Spread the love

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.எஸ்.பி.பிக்கு தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 16) எஸ்.பி.சரண் வெளியிட்ட வீடியோவில், அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.

எஸ்.பி பால சுப்பிரமணியம் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று திரைப்பிலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பினரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டரில் விடீயோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-
https://twitter.com/JananesaN_NewS/status/1295253614747725824?s=20
50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடி கோடி கோடி மக்களை மகிழ வைத்த மதிப்பிற்குரிய எஸ்.பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என கேள்விபட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ள எஸ்.பி.பி அவர்கள் சீக்கீரம் குணம் அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.