தொடர்ந்து கொட்டப்படும் எலக்ட்ரானிக் கழிவுகள்- கண்மாய்கள் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.?

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தியார்குண்டு கம்மாயில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கழிவுகளை கொட்டி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது மேலும் ,இந்த கம்மாயில் தொடர்ந்து எலக்ட்ரானிக் கருவிகள் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டுவதால் பல்வேறு விவசாய நிலங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய வரும் இந்தக் கண்மாய் ஆனது விஷத்தன்மை கொண்ட நோய் தொற்றும் ஏற்படும் அபாயமும் கொண்டு வருகிறது.

இதனை மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் நடவடிக்கை எடுக்கவில்லை என ,
அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை யாரோ சில மர்ம நபர்கள் எலக்ட்ரானிக் கருவிகளை அதாவது பழுதான டிவிகளை அங்கே கொட்டி விட்டு சென்றுள்ளார்கள். இதுபோன்று குடிநீர் வாழ்வாதாரத்தை கெடுக்கும் கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுப்பார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்?