ஆன்லைன் விளையாட்டு மூலம் கோடிகளை குவித்த கும்பல் : சீனர் உட்பட 3 பேர் கைது கைது..!

Scroll Down To Discover
Spread the love

தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டு மூலம் ரூ.1,100 கோடி பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சீனாவில் இருந்து செயல்படும் ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயம் கட்டி விளையாடுபவர்கள் கோடிக்கணக்கில் பணம் இழப்பதால் தற்கொலை செய்து கொள்வதாக ஹைதராபாத் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. 

இதையொட்டி சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்திய தெலுங்கானா போலீசார், சீனாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் வங்கி கணக்குகளில் ரூ. 30 கோடியை கண்டறிந்து முடக்கியுள்ளனர்.  

இந்தியன் ரம்மி போன்ற விளையாட்டுகள் மூலம் இதுவரை ரூ. 1,100 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 3 மடிக்கணினி மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.