ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை, ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

புனித தலங்களில் ஒன்றான வைஷ்ணவி தேவி கோவில், காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. இமயமலையில் உள்ள பவான் என்னும் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக அங்கு பக்தர்கள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு,ஆகஸ்ட் 16 முதல் மீண்டும் யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒரு நாளைக்கு 500 யாத்ரீகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கொரோனா தொற்று இல்லை என்று சான்றிதழ் கொடுக்கும் பக்தர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.