லடாக் – தீபெத் எல்லையில் உறைபனியில் 18 ஆயிரம் அடி உயரத்தில் யோகா செய்த இந்திய ராணுவ வீரர்கள்

Scroll Down To Discover

உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, சர்வதேச யோகா தினம், சர்வதேச அளவில், டிஜிட்டல் மூலம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச யோகா தினமான இன்று நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். உங்களது அன்றாட வாழ்வில் யோகாவை ஒரு அங்கமாக பழகுங்கள். இது, உடல் வலிமையுடன் மன வலிமையையும் மேம்படுத்துகிறது. யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் இல்லை. யோகாவின் பயன்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகம் தற்போது உணர்ந்துள்ளது. பகவத் கீதையில் கூட யோகா குறித்து கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல் இந்திய ராணுவ வீரர்களும் யோகா செய்தனர். லடாக் – தீபெத் எல்லையில் லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் வீரர்கள் மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் யோகா செய்தனர்.இந்தியா – சீனா எல்லையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களும் யோகா செய்தனர்.