கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழப்பவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி​ – முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் உயிரிழக்க நேரிட்டால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள அவர், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இந்த நிதியுதவி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். அத்துடன் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விருது வழங்கப்படும் என்றார்
https://twitter.com/CMOTamilNadu/status/1252874739850174465?s=20
மேலும் சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த கூடுதலாக 2 அதிகாரிகள் நியமனம் செய்யபட்டு உள்ளது.கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் அனைவரின் உடலும் பாதுகாப்புடனும், உரிய மரியாதையுடனும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்