என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கிய போலீஸ்..!

இந்தியா

என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கிய போலீஸ்..!

என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கிய போலீஸ்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளள்ன. எனினும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேலும் ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்கும் போலீசார் அவர்கள் மீது குற்றங்களுக்கு ஏற்றார்போல் வழக்குகளும் பதிவு செய்து சிறையிலும் அடைக்கின்றனர். அதேபோல் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்களுக்கு போலீசார் நூதனை தண்டனைகளும் வழங்குகின்றனர். அவ்வாறான ஒரு சம்பவம் உத்திரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், அங்கு ஊரடங்கை மீறியவர்கள் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.

உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கு உத்தரவை மீறி கங்கை நதிக்கரையோரம் சுற்றித்திரிந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.அவர்களை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளிநாட்டினர் 10 பேரும் ஊரடங்கை மீறி கங்கையை சுற்றிப்பார்க்க வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.


இதையடுத்து, ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் 10 பேரிடமும் ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர். தாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக போலீசார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்ற 500 முறை ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்’ என எழுதி கொடுத்தனர். இதையடுத்து அந்த வெளிநாட்டினரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Leave your comments here...