பிரசிதிப்பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தங்க புதையல் கண்டுபிடிப்பு..!

Scroll Down To Discover

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தளமான திருவணைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சிவன் தளங்களில் மிகவும் பிரசிதிப்பெற்ற கோவிலாகும். பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 60-வது தலமாக இருக்கும் திருவானைக்காவல், பஞ்சபூதத் தலங்களில் அப்பு (நீர்) தலம்.



தமிழ்நாட்டில் உள்ள பெரிய சிவாலயங்களில் திருவானைகாவல் தலமும் ஒன்று. ஆறு ஆதாரத் தலங்களில் இத்தலம் சுவாதிஷ்டானத் தலம். தேவாரம் பாடிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற சிறப்புடைய தலங்களில் ஒன்று. இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வர சகல தோஷங்கள் நீங்கும். திருமணத் நடை விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த கோவிலில் நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னிதி முன் உள்ள வாழைத் தோட்டத்தை, நந்தவனமாக மாற்றுவதற்கான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிகளுக்கு, குழி தோண்டிய போது, 1 அடி ஆழத்தில், பித்தளை கூஜா ஒன்று கிடைத்துள்ளது.



பின்னர் பணியாளர்கள், கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.கோவில் நிர்வாக அதிகாரிகள், பித்தளை கூஜாவை திறந்து பார்த்த போது, அதனுள் நுாற்றுக்கணக்கான தங்க நாணயங்கள் இருந்துள்ளன. வருவாய்த் துறை அதிகாரிகள், தங்க நாணயங்களை சரி பார்த்தபோது, அதில், 1,716 கிராம் எடையில், 505 நாணயங்கள் இருந்தன. கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர் ஆகியோர், தங்க நாணயங்கள் மற்றும் கூஜாவை, அரசு கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.