அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை வழங்கினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை இன்று வழங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஐம்பது ஆண்டுகால உழைப்பிற்கு அதிமுகவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி பரிசு கொடுத்துள்ளனர்” என வருத்தம் தெரிவித்திருந்தார்.

Leave your comments here...