சபரிமலையில் தங்கத் தகடு காணாமல் போனதன் பின்னணியில் சதி – கேரள தேவசம் துறை அமைச்சர் குற்றச்சாட்டு..!

Scroll Down To Discover
Spread the love

சபரிமலையில் துவாரபாலகர் சிலை மற்றும் பீடத்திற்கான தங்கத் தகடு காணாமல்போனதன் பின்னணியில் சதி உள்ளதாக கேரள தேவசம் துறை அமைச்சர் வாசவன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

4 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, தங்கத் தகடு பின்பு காணாமல்போனவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன பீடங்களில் ஒன்று 6 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் குற்றச்சாட்டு வைத்தார்.

கொடையாளர்களில் ஒருவரான உன்னி கிருஷ்ணனின் சகோதரி வீட்டில் இருந்து பீடங்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதும் தெரியவந்தது.

சபரிமலை துவார பாலகர் சிலை விவகாரம் – விசாரணை குழு அமைப்பு. சபரிமலை துவார பாலகர்கள் தங்க கவசத்தின் எடை குறைந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் விசாரணை குழு அமைப்பு. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு