திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வருகின்ற 08.04.2023-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதிகாலை 04.00 மணியளவில், அருள்மிகு மீனாட்சி அம்மன், அருள்மிகு சுந்தரேசுவரர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அங்கு திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளி மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் திருக்கோயிலிலிருந்து புறப்பாடாகி நள்ளிரவு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வந்து சேத்தியாவார்கள்.
எனவே, அன்றைய தினம் அதிகாலை 04.00 மணியளவில் அருள்மிகு அம்மன் அருள்மிகு சுவாமி புறப்பாடாகி சென்று திரும்ப நள்ளிரவு வந்து சேரும் வரை இத்திருக்கோயில் நடைசாத்தப்பட்டு இருக்கும் இத்தகவலை இத்திருக்கோயில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றார்கள். ஆலயத்தில் கலைக்கூடம் (ஆயிரங்கால் மண்டபம்) மற்றும் ஆடிவீதியில் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் துணை ஆணையர், செயல் அலுவலர், செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

														
														
														
Leave your comments here...