இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பசுமை நடவடிக்கையின் கீழ் 2.26 லட்சம் மரக் கன்றுகள் நடப்படுகின்றன
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘ட்ரீ சியர்ஸ்’ என்ற மரம் நடும் பிரச்சாரம், சுற்றுச் சூழல் உணர்வை மேம்படுத்துவதற்காகவும், நாட்டின் பசுமை பகுதியை அதிகரிக்கும் நோக்கிலும் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், இத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது.  2.26 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், பிரச்சார காலமான கடந்த 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை தங்களின் புதிய 2/3/4 சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப இந்திய ஆயில்  நிறுவன எரிபொருள் நிலையங்களுக்கு வந்தனர்.  ட்ரீ சியர்ஸ் திட்டத்தின் கீழ், இவர்கள் ஆதரவுடன், இந்தியன் ஆயில் நிறுவனம் மரக்கன்றுகளை நடுகிறது. இத்திட்டம் முடிவடைந்த 16ம்  தேதியில், 1.17 லட்சம் மரக்கன்றுகள் ஏற்கனவே நடப்பட்டுவிட்டன. இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.
https://twitter.com/IndianOilcl/status/1328685143381446656?s=20
           மரங்கள், வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடை அகற்றி, ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன. இதன் மூலம், புவி வெப்ப மயமாவது கட்டுப்படுத்தப்பட்டு, சுத்தமான, ஆரோக்கியமான சுற்றுச் சூழல் ஏற்பட உதவுகிறது.  
இந்த ட்ரீ சியர்ஸ் திட்டம் வெற்றி பெற்றதற்காக, இத்திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்த இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, ‘‘பொறுப்புள்ள நிறுவனமாக, இந்தியன் ஆயில் நிறுவனம் சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டுள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த மரம் நடும் திட்டம், மாசுவை கட்டுப்படுத்தி, பசுமை பகுதியை அதிகரிக்கும். இந்த 2.26 லட்சம் மரங்கள் வளி மண்டலத்தில், 1.35 லட்சம் டன் அளவுக்கு கார்பன்டை ஆக்சைடை அகற்றும். பண்டிகை காலத்தில், ட்ரீ சியர்ஸ் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பங்கேற்றது, சுற்றுச் சூழலை பாதுகாப்பதில், நமது மக்களின் அக்கறையை வலுப்படுத்தியுள்ளது. அனைவருக்கும் நன்றி!’’ என கூறியுள்ளார்.
இத்திட்டத்தில் பங்கேற்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், சுற்றுச்சூழலை பசுமையாக்குவதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்காக வாழ்த்துக் கடிதங்கள் வழங்கப்பட்டன. மேலும், இத்திட்டத்தில் இணைந்தவர்களை பாராட்டும் வகையில் சிறப்பு உறுப்பினர்களாக சேர்த்து, அந்நிறுவனத்தின் விசுவாச நுகர்வோர் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே வழங்கப்படும் வெகுமதி புள்ளிகளுடன் கூடுதல் புள்ளிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கியது. இந்த வெகுமதி புள்ளிகளை இந்தியன் ஆயில் எரிபொருள் நிலையங்களில் இலவச எரிபொருள் பெற பயன்படுத்திக் கொள்ளலாம்.

														
														
														
Leave your comments here...