கலக்கத்தில் சீனா : ஹிமாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய மலைப்பகுதிகளில் ரஃபேல் போர் விமானங்கள் ரோந்து பயிற்சி.!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவிற்கு வந்த ஐந்து விமானங்களும் ஹிமாசலபிரதேசத்தின் மலைப்பகுதியில், இரவு நேர நடவடிக்கைகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா பிரான்ஸிடம் 36 ரஃபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றில் 5 விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி அம்பாலா விமான தளம் வந்தடைந்தது. இந்நிலையில் இந்தியா சீனா இடையே பதட்டமான சூழல் நிலவுவதால், ரஃபேல் விமானங்கள் மூலம் எதிர்கொள்வதற்காக இந்திய விமானப்படை விமானிகள் அவற்றை இயக்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே பிரான்ஸி்ல் இந்திய விமானப்படை விமானிகள் பயிற்சி பெற்ற நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளிலும் தற்போது ரஃபேல் விமானங்களை இயக்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.ரஃபேல் விமானங்கள் 1,700 கி.மீ., சுற்றளவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் வலிமை கொண்டவை. இந்த சுற்றளவில் கிழக்கு லடாக், சீனா ஆக்கிரமித்துள்ள அக்சாய் சின், திபெத், பாகிஸ்தான் போன்ற பகுதிகள் அடங்கும்.