கொரோனா பாதிப்பு காரணமாக செப்.30ஆம் தேதி வரை ரெயில் சேவை ரத்து

Scroll Down To Discover
Spread the love

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பயணிகள், எக்ஸ்பிரஸ், விரைவு மற்றும் புறநகர் ரயில் சேவைகள் வரும் செப்., 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.