எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – இந்திய வீரர் வீரமரணம்

Scroll Down To Discover
Spread the love

காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தொடர்ந்து தனது எதிர்ப்பை தூதரக மட்டத்திலும் பதிவு செய்து வருகிறது.


காஷ்மீர் மாநிலம் ரஜோரி செக்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் சிப்பாய் ரோகின் குமார், காயமமடைந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்ததாக, பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.