அயோத்தியில் ராமர் கோவில் – ராமேஸ்வரத்திலிருந்து புனித மண் எடுத்துச் செல்ல ஏற்பாடு..!

Scroll Down To Discover
Spread the love

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இருப்பதால் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலுமுள்ள புனித நதிகளில் இருந்து புனித மண் எடுத்து அயோத்திக்கு அனுப்பும் காரியம் நடந்து கொண்டிருக்கின்றது.

இன்று ராமேஸ்வரத்தில் இருந்து புனித மண் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரால் எடுத்துவரப்பட்டு ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையான புளியால் கருமொழியில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில தென்மாவட்ட செயலாளர் ராம சத்தியமூர்த்தியிடம் வழங்கினர் உடன் விஷ்வ இந்து பரிஷத்தின் தேவக்கோட்டை நகர தலைவர் சுரேஷ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்தின் உறுப்பினர்களும் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித மண்ணை பெற்றுக்கொண்டனர்.

தற்பொழுது நாடு முழுவதும் உள்ள ஊரடங்கால் போக்குவரத்து தடை பட்ட நிலையில் இந்த புனித மண் நாளை கொரியர் மூலம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினரால் அனுப்பப்பட உள்ளது.