டீசல் விலை உயர்வை ரத்து செய்யகோரி மத்திய மாநில அரசை கண்டித்து அனைத்து இந்திய ஓட்டுநர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்..!

Scroll Down To Discover
Spread the love

டீசல் விலை உயர்வை ரத்து செய்ய சாலை வரி ரத்து இ பாஸ் முறை ரத்து செய்ய கோரியும் மத்திய மாநில அரசை கண்டித்து அனைத்து இந்திய ஓட்டுநர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரானா வைரஸ் காரணமாக அனைத்து விதமான தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரம் இழந்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் அனைத்து விதமான வாகன ஓட்டுனர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ள இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது டீசல் விலை உயர்வு பணிஉயர்வு என்று அனைத்து சுமைகளையும் உயர்த்தி கொண்டு வருகிறது

அந்த வகையில் காலை வரியை ரத்து செய்ய கோரியும் இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரியும் டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும் ஓட்டுநருக்கு அரசு தனி நலவாரியம் அமைக்கக் கோரியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்து இந்திய ஓட்டுநர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மதுரை பைபாஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் தலைவர் கணேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.