சிஆர்பிஎஃப்-ன் 82-வது அமைப்பு தினம் ; சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

Scroll Down To Discover
Spread the love

மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) 82-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “மத்திய ரிசர்வ் காவல் படை என்ற உன்னதமான படை உருவாக்கப்பட்ட இந்த 82-வது அமைப்பு தினத்தில், சிஆர்பிஎஃப் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டை பாதுகாப்பதில் சிஆர்பிஎஃப் முன்னணியில் நிற்கிறது. இந்தப் படையின் துணிச்சலும், திறன் வல்லமையும் அனைவராலும் பாராட்டப்படுகிறது.


வரும் ஆண்டுகளில் சிஆர்பிஎஃப் படை மேலும் சிறந்த சாதனைகளைப் படைக்கட்டும்” என்று கூறியுள்ளார்.