கொரோனாவில் இருந்து மீள ஆமைக்கு சிறப்பு பூஜை…! எங்கு தெரியுமா…?

Scroll Down To Discover
Spread the love

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சில்கூர் பெருமாள் ஆலயத்திற்குள் புகுந்த ஆமைக்கு, அங்கிருந்த அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களின் பாதுகாப்பிற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, தொற்றுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடுகின்றனர். அவர்களுடைய நலனும் முக்கியம் என மாநில சுகாதார துறை கவனமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சில்கூர் பெருமாள் ஆலயத்திற்குள் புகுந்த ஆமைக்கு, அங்கிருந்த அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.இதனையடுத்து ஆமையை பிடித்து அதற்கு பூஜைகள் நடத்திய அர்ச்சகர்கள், விஷ்ணுபுராணத்தின் தசாவதாரத்தில், மகாவிஷ்ணுவின் அவதாரமான கூர்மம் என்று கருதப்படும் ஆமை, சிவன் சன்னதிக்கு வந்திருப்பதால், விரைவில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மனிதகுலம் மீண்டெழும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

முன்னதாக கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கல் என்னும் இடத்தில் அணிலன் என்ற பக்தர் கொரோனா சிலையை நிறுவி கொரோனா தேவி ஆலயம் உருவாக்கி வழிப்படு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.