“ஏகே 47” குண்டுகளை தடுத்து நிறுத்தக்‍ கூடிய அதிநவீன ஹெல்மெட் – இந்திய ராணுவ வீரர்களுக்‍கு வழங்க முடிவு..!

Scroll Down To Discover
Spread the love

ராணுவ வீரர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு, ‘ஏகே 47’ குண்டுகளை தடுத்து நிறுத்தக்கூடிய, ஹெல்மெட்டுகளை வாங்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

இந்திய ராணுவ வீரர்கள் தற்போது ‘பட்கா’ ரக ஹெல்மெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரக ஹெல்மெட்டுகளை பயங்கரவாதிகள் அதிநவீன குண்டுகளைக்‍ கொண்டு தாக்‍கி வருகின்றனர். இதன்காரணமாக வீரர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வீரர்களின் சுய பாதுகாப்பு கருவிகளை நவீனமாக்க ராணுவம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ‘ஏகே 47’ குண்டுகளை தடுத்து நிறுத்தக்கூடிய, ஒரு லட்சம் தலைக்கவசங்களை இந்திய ராணுவம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இரவு நேரம் பார்க்கும் கண்ணாடி, டார்ச்களை பொருத்திக் கொள்ளும் வசதிகளும் உள்ளன. இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்களிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகாத நிலையில், சுமார் 500 கோடி ரூபாய் செலவில், ஹெல்மெட் வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது