சீனாவுடனான ரூ.900 கோடி வர்த்தகம் – அதிரடியாக ரத்து செய்த ஹூரோ சைக்கிள் நிறுவனம்..!

Scroll Down To Discover
Spread the love

ஹீரோ சைக்கிள் நிறுவனம் சீனாவுக்கு ரூ.900 கோடியில் ஏற்றுமதி செய்யவிருந்த சைக்கிள் ஆர்டரை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் சீனா உள்பட உலக நாடுகள் பலவற்றில் இருந்து ஹீரோ சைக்கிள் நிறுவனம், உயர் ரக சைக்கிள்களை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஜெர்மனில் உள்ள ஆராய்​ச்சி மற்றும் வடிவமைப்பு கூடத்தில், இந்த உயர் ரக சைக்கிள்களை வடிவமைத்து வருவதாக அதன் உரிமையாளர் பங்கஜ் முன்ஜால் தெரிவித்துள்ளார். மேலும், சீனாவிடம் 900 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், அதனை படிப்படியாக குறைக்க ஹீரோ சைக்கிள் முடிவு செய்து உள்ளதாகவும் பங்கஜ் முன்ஜால் தெரிவித்துள்ளார்.