ஜூலை மாதத்திற்கும் ரேசன் பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவு..!

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில், வரும் ஜூலை மாதத்திற்கும் ரேசன் பொருட்களை இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான டோக்கனை வீடுகளிலேயே வழங்கப்படும். டோக்கனில் உள்ளபடி ஜூலை 10 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேசன்கார்டுதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் உடன், ரேசன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல், மே ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின்படி கூடுதல் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.