நாம் புல்லாங்குழல் வைத்துள்ள கிருஷ்ணர்கள் தான்; அதே சமயம் நம்மிடம் சுதர்சன சக்கரமும் உள்ளது- ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.இதனால், எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று திடீர் பயணமாக லடாக் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உடன் இருந்தனர். லே வில் உள்ள நிமு பகுதிக்கு சென்ற மோடி, ராணுவ வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் வந்த போது, வீரர்கள், ”வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே” என உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

பின்னர் ராணுவ வீரர்களுடன் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-


நமது வீரர்களின் வலிமை இமயத்தை விட உயர்ந்தது. பாறாங்கற்கள் போன்ற மன உறுதியுடன் எல்லையை நமது வீரர்கள் காத்து வருகின்றனர். உங்களின் வீரம், நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் மலையை விட உயரமானது .வீரர்களின் வீரம், தைரியம் மூலம் ஒட்டு மொத்த உலகத்திற்கும் இந்திய ராணுவம் முக்கியமான மற்றும் வலுவான தகவலை அளித்துள்ளது.நாட்டின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களான உங்களின் கைகளில் தான் உள்ளது. வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை. ஒட்டு மொத்த இந்திய மக்களின் நம்பிக்கை நமது ராணுவ வீரர்கள் தான். உங்களின் வீரத்தால் மக்கள் பெருமை கொள்கின்றனர். உங்களின் தியாகம் மற்றும் வீரத்தால் தேசம் தலைநிமிர்ந்து நிற்கிறது.

நமது எதிரிகளின் ஒவ்வொரு திட்டத்தையும் தவிடுபொடியாக்கி வருகிறோம். நமது நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. நமது வீரர்களின் செயலுக்கு தலை வணங்குகிறேன். நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளது. இந்திய நாட்டை காக்க உயிர் இழந்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன். எதையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டியுள்ளீர்கள்.இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை. நமது வீரர்களுக்கு லடாக் மக்கள் உறுதுணையாக உள்ளனர். லடாக்கில் பயங்கரவாதத்தை உருவாக்க முயன்ற எதிரிகளின் சதி, தேசபக்தி கொண்ட மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில் மாற்றமில்லை.சியாச்சின் முதல் கல்வான் உள்ள வரை நமது நமது கட்டுபாட்டில் உள்ளது. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால் நம்மை வலுப்படுத்தியுள்ளது. இந்தியா அமைதியை விரும்பக்கூடிய நாடு என்பதை உலகம் அறியும். வீரம் என்பது அமைதியை நோக்கி செல்வது, அமைதியை எதிர்பார்ப்பது. பலவீனமாக உள்ளவர்கள், அமைதிக்கான நடவடிக்கையை துவங்கமாட்டார்கள். அமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் அச்சம் கொள்ளப்போவதில்லை.

மேலும் பிரதமர் மோடி தனது உரையின் போது,மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்குஎன்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.

நாம் புல்லாங்குழல் வைத்துள்ள கிருஷ்ணர்கள் தான்; அதே சமயம் நம்மிடம் சுதர்சன சக்கரமும் உள்ளது.அமைதியை விரும்பும் நாம் தேவைபட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்க தயங்க மாட்டோம். நாட்டை அபகரிக்க்க பேராசையுடன் செயல்பட்டோர் எப்போதும் வீழ்ச்சியை தான் சந்தித்துள்ளனர். அன்னை இந்தியாவின் எதிரிகள் உங்கள் ஆற்றலையும் கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்” “உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியரும், குறிப்பாக இந்தியாவில், நீங்கள் அனைவரும் தேசத்தை வலுவாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் தைரியம் நீங்கள் நிலைநிறுத்தப்பட்ட உயரங்களை விட உயர்ந்தது. இவ்வாறு பிரதமர் பேசினார்.