கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில், மக்கள் எல்லோரும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.கொரோனா வைரஸ் தாக்கம் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.
இதையடுத்து, மத்திய அரசு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே வரும் பட்சத்தில் அவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. குறைந்தபட்சம் கைக்குட்டையாவது பாதுகாப்பு கவசமாக அணிய வேண்டும் என்றும், சமூக பரவல் ஆவதை தடுக்க மாஸ்க் அணிந்து ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. முகக்கவசங்களை அணிவதால் நோய் பரவலைத் தடுக்க முடியும். முடிந்தவரை வீட்டிலேயே உருவாக்கி முகக்கவசங்களை அணிவது நல்லது. கைக்குட்டை உள்ளிட்டவற்றையும் மாஸ்க்காக பொதுமக்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா துறை அரசு அலுவலகத்தில் முகக்கவசம் அணியும்படி கூறிய பெண் ஊழியரை இரும்புக் கம்பியால் தாக்கினார் துணை மேலாளர் பாஸ்கர். தற்போது இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் இவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.
https://youtu.be/kY5fBRieSCI

														
														
														
Leave your comments here...