கொரோனா தடுப்பு பணி ; சானிடைசர், முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் இந்தியா ரயில்வே

Scroll Down To Discover
Spread the love

ரயில்வே தொழிற்கூடங்கள் சவாலை ஏற்றுக்கொண்டு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், சானிடைசர், முகக்கவசங்கள், கட்டில்கள் ஆகியவற்றைத் தங்கள் தொழிற்கூடங்களிலேயே தயாரித்தன. இந்தப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள்களும் ரயில்வே கிளைகளிலேயே வாங்கப்பட்டன. 24.06.2020 வரை 1.91 லட்சம் தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் 66.4 கிலோ லிட்டர் கிருமிநாசினி, 7.33 லட்சம் முகக்கவசம் போன்றவை இந்திய ரயில்வேயால் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் ஒவ்வொன்றும் தயாரிக்கும் இலக்கு 1.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த இலக்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஊரடங்கு காலத்தில், மூலப்பொருள் கொள்முதல் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை ரயில்வே கட்டமைப்பின் மூலம் நாடு முழுவதும் விநியோகம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவை நெருக்கடி காலங்களில் நிறைவேற்றப்பட்ட ஒரு கடினமான பணியாகும். தனிநபர் பாதுகாப்பு அங்கியைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருள்களை கொள்முதல் செய்வதற்காக வடக்கு ரயில்வே பரிந்துரைக்கப்பட்டது, இது தரத்தைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான அம்சமாக இருந்தது. உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட இந்தத் தயாரிப்புகள் அனைத்து தர நிலைகளையும் பூர்த்தி செய்கின்றன.


அனைத்து ரயில்வே பிரிவுகளின் தேவைகளுக்காகவும், ரயில்வேயின் தயார்நிலையை மேலும் வலுப்படுத்தவும், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (22 லட்சம்), N 95 மாஸ்க் (22.5 லட்சம்), கிருமிநாசினி 500 மில்லி (2.25 லட்சம்) மற்றும் பிற பொருள்களுக்கான கொள்முதல் வடக்கு ரயில்வேயால், Ms/ HLL லைஃப் கேர் நிறுவனத்திற்கு (சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனம்) வழங்கப்பட்டது.

ரயில்வே அமைச்சகம் 50 ரயில் மருத்துவமனைகளை கோவிட் மருத்துவமனைகளாகவும் கோவிட் சுகாதார மையங்களாகவும் நாட்டுக்கு அர்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிட் தொற்றுநோயின் சவாலை எதிர்கொள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற பொருள்களை வாங்குவதன் மூலம் இந்த மருத்துவமனைகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டன.5231 ரயில் பெட்டிகள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன, இவை நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் திறனை அதிகரிக்க கோவிட் பராமரிப்பு மையங்களாகச் செயல்படுகிறது. மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் 960 ரயில் பெட்டிகள் இதுவரை பல்வேறு இடங்களில் சேவையில் உள்ளன