பழமையான பைரப்பசாமி கோவில் சிலைகள் சேதம் : நடவடிக்கை எடுக்க கோரி இந்துமகாசபா புகார்..!

Scroll Down To Discover
Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் சிலைகள் சேதம் அடைந்ததை குறித்து நடவடிக்கை எடுக்க கோரி இந்துமகாசபா காவல்நிலையத்தில் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் மிகவும் பழமையான பைரப்பமலை மேல் உள்ள பைரப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிலைகளை சில தினங்களுக்கு முன்பு சில சமூக விரோதிகளால் சேதபடுத்தியும் தீயிட்டு கொளித்தியும் உள்ளனர்.

இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் அகில பாரத இந்து மகா சபா கிருஷ்ணகிரி மாவட்ட ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இதில் மாநில செயலாளர் ஆர் நாகராஜ் மாவட்ட கௌரவதலைவர் முருகன் ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவர் எம் மணி மாவட்ட அமைப்பு செயலாளர் HMS கார்த்திக் மாவட்ட தலைவர் இரவிபிரகாஷ் செயலாளர் எஸ் ராஜா மாவட்ட ஆலய பாதுகாப்பு பிரிவு பொருலாளர் சுந்தரமூர்த்தி மாநகர பொருப்பாளர் எம் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.