வ.உ.சிதம்பரனார் அவர்களின் 148வது பிறந்த நாள் விழாவில் வாரிசுதாரர் திருமதி செல்விக்கு அரசு சார்பில் மரியாதை…!

Scroll Down To Discover
Spread the love

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு இல்லத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 148வது பிறந்த நாள் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி  தலைமையில், (5.9.2019) நடைபெற்றது. இவ்விழாவில், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ , கலந்து கொண்டு, வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு இல்லத்தில் உள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும். வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாரிசுதாரர் திருமதி.செல்வி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்அருகில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.