அச்சன்புதூரில் முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம்..!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா தொற்று பரவலின் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைப்படி மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்களுக்கு துறை சார்ந்த அதிகாரிகள் அபராதம் விதித்தது வருகிறார்கள்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலூகா அச்சன்புதூரில் முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்தது வருகிறார்கள்.

அச்சன்புதூர் பேரூராட்சி பகுதிகளில் காவல்துறையும், பேரூராட்சி அலுவலர்களும் முக்கிய பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர். காவல் நிலைய ஏட்டு சங்கரலிங்கம், மற்றும் காவலர்களும், பேரூராட்சி வரிதண்டலர்கள் விக்டர், பசுலுர் ரஹ்மான், மீட்டர் ரீடர் மாரிமுத்து, மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் அச்சன்புதூர் முக்கிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது