வடகிழக்கு பகுதிகள் வணிகக் கேந்திரமாக மாறும் ; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்.!

Scroll Down To Discover
Spread the love

நாட்டின் புதிய வணிகக் கேந்திரமாக வடகிழக்குப் பகுதி மெதுவாகவும், வலிமையாகவும் வளர்ந்து வருவதாக மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

கொள்கை ஆராய்ச்சி மற்றும் திறனாய்வுக்கான டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் மையம் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம், ஷில்லாங் ஆகியவை இணைந்து நடத்திய மின் கருத்தரங்கு 2020-இல் காணொளிக் காட்சி மூலம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுபேசினார்

அப்போது பேசிய அவர்:- பொருளாதாரம், வணிகம், அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் புதியத் திருப்புமுனைகளை உருவாக்கும் திறனோடு புது முன்னுதாரணங்கள் கொவிட்டுக்குப் பிறகு உருவாகி, வடகிழக்கை நாட்டின் பொருளாதார மண்டலமாகவும், புது நிறுவனங்களுக்கான (ஸ்டார்ட் அப்) விரும்பத்தக்க இடமாகவும் மாற்றும்.
https://twitter.com/DrJitendraSingh/status/1268917608876609536?s=20
கடந்த பல ஆண்டுகளின் குறைகளை, மோடியின் ஆட்சியில் கடந்த ஆறு வருடங்களில் வடகிழக்குப் பகுதி நிவர்த்தி செய்துள்ளதாகவும், நாட்டின் இதரப் பகுதிகளுக்கு சமமான கவனிப்பைப் பெறுவதாகவும் கூறினார். இது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமில்லாமல், நாட்டின் பிற பகுதிகளோடும், வெளிநாடுகளோடும் இணைந்து செயல்படும் அளவுக்கு பல்வேறு மட்டங்களில் திறனை வளர்த்திருக்கிறது.