உலக சுற்றுச்சூழல் தினம் ; அச்சன்புதூரில் தமுமுக சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி

Scroll Down To Discover
Spread the love

உலக சுற்றுச்சூழல் தினம். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் தமுமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுற்றுச்சூழல் அணி செயலாளர் யஹ்யா சேக் தலைமை வகித்தார். கிளைத்தலைவர் முகம்மது சுல்தான்,
செயலாளர் ஜவ்ஹர் அலி, பொருளாளர் பக்கீர் மைதீன், துணை.தலைவர் செய்யது மசூது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியை அச்சன்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ், மாவட்ட துணைசெயலாளர் அகமது அலி ரஜாய்,
மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஆதம் காசியார், ஆகியோர் துவங்கி வைத்தனர்.ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, கிளை துணை செயலாளர்கள்: அக்பர் அலி, முகம்மது பாஸித், அப்துல் ரஹிம், மனித உரிமை அணி நாகூர் மைதீன், மாணவரணி சேக் செய்யது, தொண்டர் அணி அஜ்மல், மருத்துவ அணி சாகுல், உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.