சென்னையில் தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் – மாநகராட்சி ஆணையர்

Scroll Down To Discover
Spread the love

சென்னையில் இன்னும் 2 வாரங்களில் நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.

சென்னை தண்டையார்ப்பேட்டையில், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது: சென்னையில், அதிக சோதனை செய்யப்படுவதால், அதிக பாதிப்பு உள்ளது. பாதிப்பு அதிகரித்து பின்னர் குறைந்துவிடும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தப்படும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதித்தவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். குடிசைப்பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றை படிப்படியாக குறைக்க முடியும். மக்கள் அடர்த்தி என்பதால், தண்டையார்ப்பேட்டை ராயபுரத்தில் பாதிப்பு அதிகம் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் இன்னும் இரண்டு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.கொரோனா பரவலை தடுக்கவே மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை நீடிக்கிறது என கூறினார்.