பெங்களூர் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்.இந்த பல்கலை வரும் காலங்களில் புதிய உச்சத்துக்கு செல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
https://twitter.com/ANI/status/1267330156999274496?s=20
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி அவர்கள்:- கொரோனா வைரஸ் வேண்டுமானால் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால் கொரோனா போராளிகளான மருத்துவத் துறை ஊழியர்கள் (Corona Warriors) அழிக்க முடியாதவர்கள்,” என்று பேசியுள்ளார். இந்திய மருத்துவ பணியாளர்களை உலகம் நன்றி உணர்வோடு நோக்கி வருகிறது. புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்குவதன் மூலம் சுகாதாரத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுகிறது.
https://twitter.com/narendramodi/status/1267336572786970625?s=20
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது. தேசிய அளவில் ஊட்டச்சத்து திட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆயுஷ்மான் பாரத் உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம். அவர் மேலும், “கொரோனா வைரஸுக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் இடையிலான போரில் நம் போராளிகளே வெற்றி பெறுவார்கள்,” என்ற நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 
                                இந்தியா
                                 June 1, 2020
                                
                                
                            
                            
														
														
														
Leave your comments here...