போக்சோ வழக்கிற்க்காக காசியை 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சேர்ந்தவன் காசி என்ற சுஜி. இவன் தனது கட்டுமஸ்தான உடலை சமூக வலைதளங்களில் பரவவிட்டு தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை நண்பர்களாக்கி பின்னர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட போவதாக கூறி பல பெண்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து சென்னை சிறந்த பெண் பல் மருத்துவர் மாவட்ட போலீஸ் எஸ்பி இமெயில் மூலம் அளித்த புகாரை தொடர்ந்து கோட்டார் போலீசார் கைது செய்தனர் இதனையடுத்து அடுக்கடுக்காக 2 புகார்கள் வரத் துவங்கின பின்னர் காசி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். யார் யாருடன் தொடர்பு வைத்துள்ளான் அவரது நான் கூட்டாளிகள் வட்டம் , அரசியல் பிரமுகர்களின் தொடர்பு போன்ற பல்வேறு விவரங்களை விசாரிப்பதற்காக போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில்தான், காசியின் செயல்கள் மனித குலத்திற்கே எதிராக இருப்பதால் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என எங்களது சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு வழக்கறிஞரும் காசிக்கு ஆஜராக மாட்டர்கள் என தெரிவித்துக்கொள்கிறேன்” என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ் தெரிவித்தார். நாகர்கோவில் வழக்கறிஞர்களின் முடிவை பல்வேறு தரப்பினர் வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மகளிர் காவல்நிலையத்தில் காசி மீது போடப்பட்ட போக்சோ வழக்கிற்க்காக சிறையில் இருந்து காசியை ஆறுநாட்கள் காவலில் எடுத்து கன்னியாகுமரி மகளிர் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.