கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர் பிளாஸ்மா தானம்…! எந்த மாநிலத்தில் தெரியுமா…?

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று மட்டும், 798 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை, 8,002 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட மாவட்டங்களில், சென்னைக்கு அடுத்து, திருவள்ளூர் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

இந்த சூழலில் மக்களுக்கு கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க நம்பிக்கை அளிக்கும் விஷயமாகத் திகழ்வது பிளாஸ்மா சிகிச்சை முறை மட்டுமே.கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நபரிடமிருந்து பெறப்படும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா பிரிக்கப்பட்டு, அந்த பிளாஸ்மாக்களை பாதிப்பிற்கு ஆளான நபர்களுக்கு வழங்கும் முறை.இப்படிச் செய்வதால் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நபரின் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கொரோனா வைரசுடன் சண்டைபோட்டு அதை வெற்றிக் கொல்லும்.இந்த பிளாஸ்மா சிகிச்சைக்காக இதுவரை மாநிலத்தில் குணமடைந்த பலர் தங்கள் ரத்தத்தைத் தானமாக வழங்கி வருகின்றனர்.

முன்னதாக தவிஹித் ஜமாத் டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த இஸ்லாமியர்கள் பலர் நோய்ப் பாதிப்பிலிருந்து மீண்டவுடன் தாமாக முன் வந்து இதைச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னையை சேர்ந்த ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து மீண்டவரிடமிருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டுள்ளது.