கொரோனா பாதிப்பை சமாளிக்க மாநிலங்களுக்கான நிதிகள் விடுவிப்பு : தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால் 45 நாட்களுக்கு மேலாகியும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கையொட்டி விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரவல் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு பின்னர் 5-வது தடவையாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கம் தமிழகம், கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடியை, நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக, கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுகொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நிதி அமைச்சகம், ரூ. 6,195 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்புக்கு ரூ.638 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 335.41 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மேகாலயாவிற்கு ரூ.40 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘கொரோனா நெருக்கடியில் இருக்கும் மாநில அரசுகளுக்கு உதவும் வகையில், 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி, 2வது தவணையாக, 14 மாநிலங்களுக்கு ரூ .6,195.08 கோடி வழங்கப்பட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியுடனான நேற்றைய ஆலோசனையின் போது, முதல்வர் பழனிசாமி தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணத் தொகை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.